இயற்கை தான் ...வாழ்க்கையின் வழிக்காட்டி ....
நம் மண்ணின் காயகல்பங்கலான மூலிகைகள் பற்றி நமது மூதாதையருக்கு இருந்த விழிப்பு உணர்வு நம்மிடம் இல்லை. ஆனால், வெளிநாட்டினர்தான் நமது சித்த மருத்துவத்தையும், மூலிகைகளையும் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையை மாற்றி நம் தமிழ்நாட்டினருக்கும் மூலிகைகளைப் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ''இயற்கை என்பது இறைமை, அதை நாம் வணங்க வேண்டும்; இயற்கை என்பது அறிவு அதனிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டும்; இயற்கை என்பது வழிகாட்டி, அதனுடன் நாம் பயணிக்க வேண்டும். மரங்களோடு உறவாடும்போது அவற்றுக்கு உயிர் இருப்பதை நாம் உணர முடியும்.
வீட்டு வாசலில் ஒரு வேப்பமரத்தை வைத்தாலே காசில்லாமல் மருத்துவர் நமக்கு சேவகம் செய்வதாக நினைத்துக் கொள்ளலாம். இனிப்பைத் தவிர, மற்ற சுவைகளை மக்கள் விரும்பி உண்பதில்லை. ஆனால், மற்ற சுவைகள்தான் உடலை வளப்படுத்தும். சுவையான உணவைத் தேடுவதால் நோயினை சம்பாதிக்கிறோம்'' என்று சொன்னவர்,
''ஏர் முனையைக் காக்க பேனா முனையைக் கொண்டு போராடும் 'பசுமை விகடன்’, தமிழ் மக்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம்'' என்று பாராட்டு தெரிவித்தார்.
No comments:
Post a Comment