Friday, August 9, 2013

வனங்கள் பற்றி கற்க வேண்டுமா? 
சிறந்த கல்வி நிறுவனங்கள் (63)


உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் அமைந்துள்ள ‘பாரஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்’ உலகின் மிகப்பழமையான வனவியல் கல்வி நிறுவனங்களில் ஒன்று. இது 1906ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்கு நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டது.

‘இந்தியன் கவுன்சில் ஆப் பாரஸ்ட்ரி ரிசர்ச் அண்டு எஜுகேஷனி’ன் கீழ் இது இயங்கி வருகிறது. நாலரை கி.மீ., பரப்பளவில் இமயமலை பகுதிக்கு அருகே எப்.ஆர்.ஐ., உள்ளது. டான் நதியின் கரையில் கிரேக்க பாணியிலான கட்டடத்துடன் அழகிய சூழலில் இந்த கல்வி நிறுவனம் அமைந்துள்ளது.

இதில் ஆய்வுக்கூடம், நூலகம் தவிர மரங்கள் குறித்த சோதனைக்காக மிகப்பெரிய நிலப்பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ‘இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ்’ அதிகாரிகளுக்கு இங்கு தான் பயிற்சியளிக்கப்படுகிறது. பஞ்சாப், அரியானா, டில்லி, உத்தரபிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் காடுகள் தொடர்பான ஆய்வுப்பணிகளில் எப்.ஆர்.ஐ., தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இதுதவிர இந்தியா, பாகிஸ்தான், பூடான், வங்கதேசம் மற்றும் மியான்மர் நாடுகளில் காட்டுபிரதேசங்களில் உள்ள மரவகைகள் குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர். யூகலிப்டஸ், தேக்கு ஆகிவற்றில் கலப்பின வகை மரங்கள் உருவாக்குவது குறித்த ஆய்வில் குறிப்பிடத்தகுந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது எப்.ஆர்.ஐ., பி.எச்.டி., ஆய்வு படிப்புகளை தவிர ‘பல்ப் அண்டு பேப்பர் டெக்னாலஜி’, ‘உட் டெக்னாலஜி’, ‘பிளான்டேஷன் டெக்னாலஜி’ ஆகியவற்றில் போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ படிப்பும் இங்குள்ளது. இங்குள்ள ‘ஹெர்பேரியத்’தில் 3 லட்சத்து 30 ஆயிரம் வகை செடி மாதிரிகளும்,18 ஆயிரம் வகை மர மாதிரிகளும் பாதுகாக்கப்படுகின்றன.

இந்தியன் கவுன்சில் ஆப் பாரஸ்ட்ரி ரிசர்ச் அண்டு எஜுகேஷனின்கீழ் செயல்பட்டு வரும் பிற கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்கள்


  • இன்ஸ்டிடியூட் ஆப் பாரஸ்ட் ஜெனிட்டிக்ஸ் அண்டு டிரீ பிரீடிங், கோவை
  • இன்ஸ்டிடியூட் ஆப் உட் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி, பெங்களூரு
  • டிராபிகல் பாரஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், ஜபல்பூர்
  • ரெயின் பாரஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், ஜோரத்
  • அரிட் பாரஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், ஜோத்பூர்
  • ஹிமாலயன் பாரஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், சிம்லா
  • இன்ஸ்டிடியூட் ஆப் பாரஸ்ட் புரடக்டிவிட்டி, ராஞ்சி
  • சென்டர் பார் சோஷியல் பாரஸ்ட்ரி அண்டு ஈகோ ரிஹபிலிடேஷன், அலகாபாத்
  • சென்டர் பார் பாரஸ்ட்ரி ரிசர்ச் அண்டு ஹியூமன் ரிசோர்ஸ் டெவலப்மென்ட், சிந்த்வாரா
  • பாரஸ்ட் ரிசர்ச் சென்டர், ஐதராபாத்
  • அட்வான்ஸ்ட் ரிசர்ச் சென்டர் பார் பேம்பூ அண்டு ரடான்ஸ், அய்சால்.

No comments:

Post a Comment