Thursday, August 1, 2013

பச்சை வளம் காப்போம்

   

பச்சை வளம் காப்போம்

     வானம்  பொழிய, பூமி செழிக்க உலகமக்கள் வளமுடன் வாழ மிக மிக அவசிய தேவை மழை. பருவம் தவறாமல் மழை பொழிந்தால் தான் பூமி செழிக்கும் மக்களனைவரும் நலமும், வளமும் பெற்று வாழ்வர். ஆனால் இன்று மழை பொய்த்து பருவம் தப்பிவிட்டது. பருவநிலையும் மாறிவிட்டது. எதனால் நாடு  காடென்று பாராமல் மரங்களை வெட்டியதால் வந்த வினை.                                                                                                                                   பூமியில் மூன்றில் ஒரு பங்கு காடுகள் இருக்கவேண்டும் என்பது இயற்கயின்விதி . இவ்வாறு இருந்தால் நமக்கு கிடைக்கும் பயண்கள் ஏராள ம் மரங்கள் மழையை தருவதுடன் நிலச்சரிவைக் கட்டுபடுத்துகிறது,மண் அரிப்பைத் தடுக்கிறது.கரியமிலவாயுவை நிர்ணயம் செய்யும் தன்மை மரங்களுக்கு உள்ளது. புவியின் தட்பவெப்பத் தன்மையை நிர்ணயிக்கும் காரணிகளாக மரங்கள் உள்ளன .  
   
     மரங்கள் அழிக்கப்படுவதால் கடல் மட்டம் உயர்வு ,பூமி வெப்பம் ஏற்பட்டு சில பகுதிகளில் அதிக மழை,சில பகுதிகளில் வறட்சி உருவாகிறது.கடலோரப்பகுதிகளில் மரங்கள் வளர்க்கப்படும்போது அலைகளை கட்டுப்படுத்தும் சக்தி மரங்களுக்கு உண்டாகிறது . பூமியை காதால்த்தான் உயிரினங்களையும்க் காக்க முடியும் .மனிதர்கள் நலமாக வாழ முடியும் .மரம் வளர்ப்பு என்பதை அத்தியாவசியமான  ஒரு மக்கள் இயக்கமாக, நமக்குநாமே பசுமை வளர்ப்பு திட்டமாக கொண்டுச்சென்றால் தான் செயல்படுத்தமுடியும் . 

மரம்  வளர்ப்போம் , மற்றவர்களையும் மரம் வளர்க்க தூண்டுதலாகவும் இருப்போம் .  

மனிதம்  வாழ                                                   மரங்களை  வளர்ப்போம் .....

No comments:

Post a Comment